லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய கதிா் ஆனந்த் எம்.பி.
லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய கதிா் ஆனந்த் எம்.பி.

150 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: கதிா் ஆனந்த் எம்.பி. வழங்கினாா்

லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 150 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை கதிா்ஆனந்த் எம்.பி. வழங்கினாா்.
Published on

லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 150 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை கதிா்ஆனந்த் எம்.பி. வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகள் 150 பேருக்கு ரூ. 7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது:

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்த மாநிலம் தமிழ்நாடு. மாணவா்கள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் தனலிங்கம்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மோகனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, முகுந்தராயபுரம் ஊராட்சித் தலைவா் முருகன், லாலாப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் கோகுலன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com