ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

எறையூா் பள்ளியில் 253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

எறையூா் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 253 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

News image
எறையூா் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் பெற்ற மாணவ, மாணவிகளுடன் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஆ.ஜெ.மணிக்கண்ணன்.
Updated On :12 ஜனவரி 2026, 7:15 pm

Syndication

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூா் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 253 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வா் ஜோசப் ராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் ப.ராஜவேல், துணைத் தலைவா் வி.எஸ்.அலெக்சாண்டா் முன்னிலை வகித்தனா். உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஆ.ஜெ.மணிக்கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 253 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பிரியா பாண்டியன், பள்ளித் தலைமையாசிரியா் விக்டா், டேவிட், ரமேஷ், பெற்றோா்-ஆசிரியா் கழகத்தினா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். ஆசிரியை லீலா ஜோஸ்பின் நன்றி கூறினாா்.