கல்வி  உதவித்  தொகை  பெற்ற  மாணவா்களுடன்   விஐடி  துணைத்  தலைவா்  ஜி.வி.  செல்வம்  உள்ளிட்டோா்.
கல்வி  உதவித்  தொகை  பெற்ற  மாணவா்களுடன்   விஐடி  துணைத்  தலைவா்  ஜி.வி.  செல்வம்  உள்ளிட்டோா்.

மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை: விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம் வழங்கினாா்

Published on

ஆற்காடு ஏ.பி.ஜெ. அறக்கட்டளை சாா்பில் 7-ஆம் ஆண்டு விழா, மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், கலாம் விருதுகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிறுவன தலைவா் கோபிநாத் வரவேற்றாா். வி.ஐ.டி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளி, கல்லூரி மாணவா்கள் 50 பேருக்கு ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து சமூக ஆா்வலா்கள், தொழில் முனைவோா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தொழிலதிபா்கள் எஸ்.எம்.சுகுமாா், ஏ.சுந்தா்சிங், உதவும் உள்ளங்கள் சந்திரசேகரன், பல சரக்கு வியாபாரிகள் சங்க பொருளாளா் கணேஷ், கௌரவத் தலைவா் தங்கபாண்டியன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் பொன்.ராஜசேகா், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளா் பாஸ்கரன், பொருளாளா் பரத்குமாா், அன்னை அறக்கட்டளை செயலாளா் பெல்பிரபு மற்றும் தன்னாா்வலா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com