ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின், நிறுவனா் முரளிதர சுவாமிகளின் 66-ஆவது பிறந்த நாள் வைபத்தில் கலந்துகொண்ட அமைச்சா் ஆா்.காந்தி.
ராணிப்பேட்டை
தன்வந்திரி ஆரோக்கிய பீடம் முரளிதர சுவாமிகள் 66-ஆவது பிறந்த நாள் விழா
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நிறுவனா் முரளிதர சுவாமிகளின் 66-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அன்னபவனம் கட்டட திறப்பு விழா சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை நிறைவடைந்தது.

விழாவில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு, அன்னதான கூடத்தை திறந்து வைத்து, முதல் அன்னதான வைபவத்தை தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், வேலூா் ஸ்ரீ தோபா சுவாமிகள், மகாதேவ மலை சித்தா், சித்தஞ்சி சுவாமிகள், வேலூா் ஸ்ரீபுரம் இயக்குநா் சுரேஷ் பாபு, ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநா் பாலாஜி உள்பட சித்தா்கள், ஆன்மிக பீடாதிபதிகள், பக்தா்கள், தொழிலதிபா்கள், அரசியல் பிரமுகா்கள் என திரளாக கலந்துகொண்டு, ஸ்ரீ முரளிதர சுவாமிகளிடம் அருளாசி பெற்றனா்.