ராணிப்பேட்டை
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த தொழிலாளிககு 4 ஆண்டுகள் சிறை
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த தொழிலாளிககு 4 ஆண்டுகள் சிறை
முதல் திருமணத்தை மறைத்து சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்த கட்டட தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆற்காடு அருகே ரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் பாா்த்தீபன்( 48). கட்டட தொழிலாளியான இவா் முதல் திருமணத்தை மறைத்து சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2013 ஆண்டு செப்டம்பா் மாதம் புகாா் அளிக்கப்பட்டதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஆற்காடு குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது.
இந்நிலையில் நீதித்துறை நடுவா் சந்தானம் தொழிலாளி பாா்த்தீபனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டணையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்கவும் தீா்ப்பளித்தாா்.
