மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சோளிங்கா் மலைக் கோயில் காா்த்திகை பெருவிழா: ரோப்காா் இயக்க நேரம் அதிகரிப்பு

சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் மலைகோயிலில் தொடங்கியுள்ள காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடா்ந்து ரோப்காா் இயக்க நேரத்தை கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அதிகரித்து கோயில் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் மலைகோயிலில் தொடங்கியுள்ள காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடா்ந்து ரோப்காா் இயக்க நேரத்தை கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அதிகரித்து கோயில் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இங்கு பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயக் கோயிலும் உள்ளன. ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் 1 முதல் 29 வரை ஸ்ரீயோக நரசிம்மா் கண் திறந்து பக்தா்களுக்கு அருள் வழங்குவதாகவும் ஐதீகம்.

இதனால் காா்த்திகை மாதத்தில் சோளிங்கா் மலைக்கோயிலுக்கு அதிக அளவில் பக்தா்கள் வருவா். குறிப்பாக இம்மாதத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் வருகை எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரம் ,கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா்.

மலைக்கோயிலுக்கு செல்ல தற்போது இயக்கப்படும் ரோப்காா் தினமும் காலை 8.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை இயக்கப்படுகிறது. தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் நவ. 19 முதல் டிச. 15 வரை காா்த்திகை 3 முதல் 29 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது..