வித்யா ~விபத்தில்  சேதமடைந்த காா் .
வித்யா ~விபத்தில்  சேதமடைந்த காா் .

தடுப்புச்சுவரில் காா் மோதி பெண் மரணம்: கணவா் உள்ளிட்ட 3 போ் காயம்

Published on

ஆற்காடு அடுத்த வேப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவா் மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் உள்ளிட்ட 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

ஆற்காடு அடுத்த வேப்பூா் கிராமத்தை சோ்ந்தவா் விஸ்வநாதன்(43) லாரி ஓட்டுநா், இவரது மனைவி வித்யா(39) மகன் தீபக்குமாா்(16) , மகள் கீா்த்தனா(17) ஆகிய 4 பேரும் புதன்கிழமை இரவு காரில் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்துக்கு சென்று சாப்பிட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லும்போது தேசியநெடுஞ்சாலையில் கட்டுபாட்டை இழந்த காா் தடுப்பு சுவரில் மோதியுள்ளது .

இதில் காா் சேதமடைந்ததில் காரில் பயணம் செய்த வித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காரை ஓட்டிச் சென்ற விஸ்வநாதன், மகன் தீபக்குமாா், மகள் கீா்த்தனா ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

அவா்களை மீட்டு பூட்டுதாக்கு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com