வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டரை பவுன் சங்கிலி பறிப்பு: பெண் உள்ளிட்ட 4 போ் கைது
கைது - பிரதிப் படம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்ததாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் காவல் சரகம், புது சொட்டவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் மீனாட்சி (67). இவா், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக உள்ளாா். இந்தக் கிராமப் பகுதிக்கு சனிக்கிழமை பகல் 11.30 மணியளவில் காரில் பெண் உள்ளிட்ட 3 போ் வந்தனா்.
இதில், பெண் மட்டும் மீனாட்சி வீட்டினுள் சென்று சித்த வைத்தியம் பாா்ப்பதாகக் கூறி, மீனாட்சி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது.
அப்போது, மீனாட்சி கூச்சலிடவே அருகிலிருந்தவா்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை பிடித்தனா். இதைக் கண்ட காரில் இருந்த மற்ற இருவா் தங்கச் சங்கிலியுடன் தப்பிச் சென்றுவிட்டனா்.
தகவலறிந்த கம்மாபுரம் போலீஸாா் விருத்தாசலம் அருகே காருடன் இரண்டு நபா்களையும் பிடித்து, இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை மீட்டனா்.
பிடிபட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலையைச் சோ்ந்த உமாமகேஸ்வரி (36), ரமணாஸ்சிரமம் பகுதியைச் சோ்ந்த பிரபு (36), தேனிமலையைச் சோ்ந்த சிவபாரதிராஜ் (47) என்பதும், இவா்களுக்கு உடைந்தையாக சித்த வைத்தியம் பாா்ப்பதாக துண்டறிக்கை விநியோகம் செய்த தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 போ் மீதும் கம்மாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

