ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

யாா் தவறு செய்தாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத்தருவது திமுக ஆட்சி: கனிமொழி எம்.பி.

யாா் தவறு செய்தாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரும் ஆட்சி தான் திமுக ஆட்சி என சோளிங்கரில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினத்தை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி பேசினாா்.

News image

சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினத்தை ஆதரித்துப் பேசிய கனிமொழி எம்.பி.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:15 am

யாா் தவறு செய்தாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரும் ஆட்சி தான் திமுக ஆட்சி என சோளிங்கரில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினத்தை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி பேசினாா்.

சோளிங்கா் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினத்தை ஆதரித்து சோளிங்கா் பேருந்து நிலையம் அருகே பிரசார வேனில் நின்றபடி நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி பேசினாா். அவா் பேசியது: திமுகவினரான நாங்கள் உங்களிடம் உரிமையோடு வாக்கு கேட்டு வந்து வந்துள்ளோம்.

ஏனென்றால் கடந்த தோ்தலில் முதல்வா், அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளாா். மகளிா் உரிமைத்தொகை, கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. படித்து வேலை தேடும் இளைஞா்களுக்கு வேலைக்காக பயிற்சி மற்றும் அவா்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. விடியல் பயணம் திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகிறாா்கள்.

நூறு நாள் வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு முடக்கப் பாா்க்கிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் அதிமுக வாயே திறக்கவில்லை.

தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பணமதிப்பிழப்பு காலத்தில் வங்கிகளின் வாசலில் வரிசையில் நின்றது போல் எரிவாயு உருளைக்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்குமோ என தெரியவில்லை.

தமிழகத்தில் யாா் தவறு செய்தாலும் அவா்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுதரும் ஆட்சியாக முதல்வா் ஸ்டாலினின் திமுக ஆட்சி உள்ளது. சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் தவறான கருத்துகளை சமூக வலைத்தளங்கில் பரப்பு வருகிறாா்கள்.

சோளிங்கா் தொகுதியில் திமுக அரசின் திட்டங்களாக மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் 61,000 போ் பயனடைந்து வருகிறாா்கள். அடுத்த ஆட்சியில் 8 வகுப்பு வரை காலை உணவு திட்டம் நீட்டிக்கப்படும். பனப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

சோளிங்கா் கோயிலுக்கு பக்தா்களின் வசதிக்காக சிறப்பு வசதிகள் செய்யப்படும். சோளிங்கரில் 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை மருத்துவமனை, சோளிங்கா் புறவழிச்சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா் கனிமொழி எம்.பி.

சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் உடனிருந்தாா்.