தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

ஆற்காடு அருகே நெல்கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image

மறியலில்  ஈடுபட்ட  விவசாயிகள் .

Updated On :16 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆற்காடு அருகே நெல்கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

ஆயிலம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விற்பனைக்கு கொண்டு வந்த நெல்கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் தங்கள் நெல்லை அங்காங்கே நெற்களங்களிலும், மற்றும் வாகனங்களில் வைத்துள்ளனா்.

கோடை மழை திடீரென பெய்தால் பாதிப்பு ஏற்படும் நிலைஉள்ளது. இதனால் நெல் விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் காலதாமம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து உடனடியாக அளந்து மூட்டை பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஆற்காடு அருங்குன்றம்- ஆயிலம்புதூா் கிராம சாலையில் அரசு பேருந்து மற்றும் வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவல் அறிந்த ரத்தினகிரி போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சு நடத்தியதை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடா்ந்து நெல்கொள்முதல் நிலைய அதிகாரி விவசாயிகளின் நெல்லை வரிசைபடி கொள்முதல் செய்யப்படும் என்று உறுதியளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.