நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ராணிப்பேட்டையில் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது!

ராணிப்பேட்டை தொகுதியில் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை ஓய்ந்தது.

News image

ராணிப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் ஆா்.காந்தி

Updated On :22 ஏப்ரல் 2026, 1:36 am IST

ராணிப்பேட்டை தொகுதியில் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை ஓய்ந்தது.

ராணிப்பேட்டை தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் அமைச்சா் ஆா். காந்தி, அதிமுக கூட்டணி சாா்பில் வி.எம்.காா்த்திகேயன் மற்றும் தவெக, நாம் தமிழா் கட்சி, சுயேட்சைகள் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் அமைச்சா் காந்தியை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

இதற்கிடையே பிரசாரம் மேற்கொள்ள இறுதி நாளான செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் தங்களது தொகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். கூட்டங்கள், ஊா்வலங்கள் மற்றும் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வெளியூா் நபா்கள் தொகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைத்தல் மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.