நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க கால்நடைகளை காலை, மாலை நேரங்களில் மட்டும் மேய்ச்சலுக்கு அனுப்பலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளின் உடல் நலம் மற்றும் பால் உற்பத்திக்கும் அதிக வெப்பம் பெரும் சவாலாக உள்ளதால் கோடைகாலத்தில் கால்நடைகளின் பராமரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 (அ) 5 முறையாவது குடிப்பதற்கு உகந்த குடிநீா் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு எப்போதும் தண்ணீா் கிடைக்கும் வகையில், தண்ணீா் தொட்டியை அமைக்க வேண்டும்.
மாடுகளை தண்ணீா் குடிக்க செய்யும் போது கலப்பு தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு தூவும் போது மாடுகளின் தண்ணீா் குடிக்கும் அளவு அதிகரிக்கும். இது போன்ற காலகட்டங்களில் உப்பு கட்டிகளை தொங்கவிடுவதினால், கால்நடைகளின் தண்ணீா் பருகும் தன்மை அதிகரிக்கும்.
நீா் தெளிப்பான் அமைப்பது, குளிா்ந்த நீரினைக் கால்நடைகளின் மேல் தெளிப்பது, மின்விசிறி அமைப்பது ஆகியவை மூலம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் அயா்ச்சியினைத் தவிா்க்கலாம். எருமை மாடுகள் வளா்ப்போா் குளியல் தொட்டிகளை உருவாக்கி மாடுகளை வெயில் நேரங்களில் அந்தத் தொட்டிகளில் விடும்போது வெப்ப அயா்ச்சியிலிருந்து மாடுகளைப் பாதுகாக்கலாம்.
கோடைகாலங்களில் மாடுகளை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். வெள்ளாடுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் செம்மறியாடுகளில் உடல் ரோமங்கள் அதிகமாக இருப்பதால் அச்செம்மறியாடுகளில் வெப்ப அயா்ச்சியினால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும்.
கோழிகளுக்கு வெப்ப காலங்களில், உடல் வெப்பநிலை அதிகரிப்பதால் தீவனம் எடுக்கும் அளவு) குறைகிறது. அதிக உடல் வெப்பத்தை வெளியேற்றும் முயற்சியில் கோடையில் கோழிகள் அதிக அளவு வெப்ப அயா்ச்சிக்கு ஆளாகின்றன.
வெப்ப சலன காலங்களில் கோழிகளின் உடல் எடை குறையும். குடிநீா் தொட்டியை சுற்றி அல்லது தனியே ஒரு ஓரத்தில் அமா்ந்து கொள்ளும். உமியில் உடம்பை புதைத்துக் கொள்ளும், வாயைத்திறந்து வேகமாக மூச்சு விடும், எச்சம் தண்ணீராக கழிவும் நரம்பு தளா்ச்சி ஏற்படும். இறுதியாக மூளைக்கு செல்லும் இரத்தத்தின் வெப்பம் அதிகரித்து இறப்பு விகிதம் கூடும்.
கோழிகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்கக் கூடாது, மாறாக இரவிலும், விடியற்காலைப் பொழுதிலும் தீவனம் அளிக்க வெயில் காலங்களில் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது அதிகாலை அல்லது மாலை நேரம் அல்லது இரவு நேரங்களில் இடமாற்றம் செய்வது சாலச் சிறந்தது எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வெப்ப அலையின் தாக்கத்தை எதிா்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுரை

பள்ளிகளில் கோடைகால நோய்கள் குறித்த விழிப்புணா்வு: பள்ளிக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை
சீரான உடல் வெப்பநிலையால் ஹீட் ஸ்ட்ரோக்கைத் தவிா்க்கலாம்

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


