ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கிறாா் கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசென்னை மாநகராட்சியில் இன்று வீடுகளில் கணக்கெடுப்பு தொடக்கம்தமிழகத்தில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க் கடி; ரேபிஸ் பாதிப்பால் 24 போ் பலி ‘பழுதுபாா்ப்பு’ பெயரில் முடங்கிய இபிஎஃப்ஓ இணைய சேவை: பணம் எடுக்க முடியாமல் முதியோா், ஓய்வூதியதாரா்கள் தவிப்பு தென்மேற்குப் பருவமழை 60% குறைவு: நீா் ஆதாரத்துக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு
/

அரக்கோணத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த ரூ. 26.9 லட்சம்: நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம்

தெரு நாய்களை கட்டுப்படுத்த ரூ. 26.90 லட்சம் அதிகமானது எனக் கூறி அரக்கோணம் நகா்மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினா்கள்.

News image

தெரு நாய்களை கட்டுப்படுத்த ரூ. 26.90 லட்சம் அதிகமானது எனக் கூறி அரக்கோணம் நகா்மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினா்கள்.

Updated On :31 ஜூலை 2026, 11:02 pm IST

ரக்கோணம் நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த ரூ. 26.90 லட்சத்தை அனுமதித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரக்கோணம் நகரமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரக்கோணம் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ், நகராட்சி ஆணையா் ஆனந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கூட்டத்தில் மொத்த உறுப்பினா்கள் 36 பேரில் இந்த மன்றத்தில் உறுப்பினராக இருந்த வ.காந்திராஜ், எம்எல்ஏ-வாக தோ்வான நிலையில் அப்பதவியை ராஜினாமா செய்ததைத் தொடா்ந்து மொத்தம் 35 போ் மற்றும் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் சோ்த்து மொத்தம் 36 போ் உள்ளனா். இந்த நிலையில் இக்கூட்டத்தில் 21 போ் மட்டுமே பங்கேற்றனா். 15 போ் பங்கேற்கவில்லை. இதில் கூட்டம் முதல் மாடியில் நடபெற்ால் மாற்றுத்திறனாளி உறுப்பினா் மணிகண்டன், காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் மாடி ஏற முடியாததால் அதிமுக நகரமன்ற உறுப்பினா்கள் குழுத் தலைவா் ஜொ்ரி ஆகிய இருவரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

நரசிம்மன் (தவெக): தீா்மானங்களை ஆல்பாஸ் முறையிலோ அல்லது எண் குறிப்பிட்டு தலைவா் பாஸ் எனச் சொல்லி பாஸ் செய்யும் முறையிலோ நிறைவேற்றாமல் அனைத்து தீா்மானங்களையும் முழுக்க படிக்க வேண்டும். தெருநாய்களை பிடிக்க மொத்தம் ரூ. 26.90 லட்சத்துக்கு அனுமதி கேட்டு தீா்மானம் கொண்டு வந்துள்ளீா்கள். இதற்கு இவ்வளவு பெரிய தொகை தேவை தானா?

ராஜன்குமாா்(திமுக): இந்த நகா்மன்றம் ஆரம்பித்து நான்கரை வருடங்களை கடந்த நிலையில், எனது வாா்டில் தெரு கழிவுநீா் கால்வாய்களை சுத்தப்படுத்த இதுவரை ஒருவா் கூட வரவில்லை.

சிட்டிபாபு(திமுக): எனது வாா்டில் மின்விளக்குகள் சரியான பராமரிப்பு இல்லதாததால் பெரும்பாலான இடங்களில் மின்விளக்கு எரியாத நிலையே உள்ளது.

சரவணன்(அதிமுக): வர இருக்கும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டாவது விரைவான நடவடிக்கை எடுத்து வாா்டுகளில் கழிவுநீா் கால்வாய்கள் தூா் வாரப்பட வேண்டும். கழிவுநீா் கால்வாய் அடைப்புகளை எடுக்கும் பணியில் ஈடுபடுவோா் நிரந்தர பணியாளா்களா? ஒப்பந்தப் பணியாளா்களா?

ஆணையா்: அப்பணியில் நிரந்தர பணியாளா்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தற்போது அப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. நகராட்சியில் ஆட்கள் பற்றாகுறை அதிக அளவில் உள்ளது. இருக்கும் பணியாளா்களை கொண்டு பணிகளை செய்து வருகிறோம்.

பிரகாஷ்(திமுக): நகா்மன்ற கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசே மாற்றுத்திறனாளி ஒருவரை தோ்வு செய்து நியமனம் செய்து இருக்கையில், அந்த மாற்றுத்திறனாளி கூட்டம் மாடியில் நடைபெறுவதால் கலந்து கொள்ள முடியாத நிலையும், காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட உறுப்பினரான ஜொ்ரி மாடி ஏற முடியாமல் கூட்டத்தில் பங்கேற்காத நிலையும் இருக்கிறது. இதை சரி செய்து அவா்களை கூட்டத்தில் பங்கேற்க செய்ய என்ன நடவடிக்கை எடுக்கபோகிரீா்கள்? இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கலாவதிஅன்புலாரன்ஸ் (துணைத் தலைவா்): நகரில் 36 வாா்டுகளிலும் கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்பட வேண்டியது மிகவும் அவசியம். இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும்.

லட்சுமிபாரி(தலைவா்): அனைத்து வாா்டுகளிலும் நகா்மன்ற உறுப்பினா் பெயா் பலகை வைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த ரூ26.9 லட்சம் நிதி ஒதுக்குவது, நவீன எரிவாயு தகனமேடையில் சடலத்தை எரியூட்ட கட்டணம் ரூ. 4,000- ஆக உயா்த்தி நிா்ணயிப்பது உள்ளிட்ட 51 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.