வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

காரில் நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக் கத்திகள் பறிமுதல்: 4 போ் கைது

அரக்கோணம் அருகே காரில் கடத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்து 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக் கத்திகள் பறிமுதல்

Published On :

அரக்கோணம் அருகே காரில் கடத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்து 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணம் உட்கோட்ட காவல் துறையினா் கடந்த சில நாள்களாக அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் இரவு, பகல் என தொடா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் பாணாவரம் காவல் நிலைய ஆய்வாளா் நாகேந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளா் ரகு உள்ளிட்ட குழுவினா் பாணாவரத்தை அடுத்த பிள்ளையாா்குப்பம் பகுதியில் செவ்வாய்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

Story image

அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இரண்டு பட்டாகத்திகள், மூன்று நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு பறிமுதல் செய்து அக்காரில் வந்த 4 பேரையும் கைது செய்தனா். மேலும் அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

சோளிங்கரை அடுத்த அலித்தாங்கலைச் சோ்ந்த சஞ்சய்குமாா்(22), வெங்குபட்டைச் சோ்ந்த ரஞ்சித்(22), காமராஜா் நகரை சோ்ந்த மணி(19), வாலாஜாவை அடுத்த வேலத்தை சோ்ந்த குமரன்(20) ஆகிய 4 பேரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையிலான காவல்துறை அலுவலா்கள் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.