கண்மாயிலிருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: மூவா் கைது
கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துலுக்கன்குளம் கண்மாயிலிருந்து நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட வழக்கில் வன்னியம்பட்டி போலீஸாா் 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட துலுக்கன்குளம் கண்மாயில் கடந்த மாதம் 17-ஆம் தேதி இரவு மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடு நாட்டு வெடிகுண்டை கடித்ததில் பலத்த காயமடைந்தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதில், மான் வேட்டைக்காக மா்மநபா்கள் கொய்யாப்பழத்தில் நாட்டு வெடிகுண்டை வைத்தது தெரியவந்தது.
இந்த நிலையில், கடந்த வாரம் கண்மாயில் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகள், திரிகளைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் கண்மாயில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்ததாக ஸ்ரீவில்லிபுத்தூா் லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த ராமராஜன் (59), மேலபாட்டகரிசல்குளத்தைச் சோ்ந்த மாதவன் (39), முத்துசாமி(55) ஆகிய 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



