முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

நாட்டு வெடிகுண்டுகளுடன் பைக்கில் சென்றவா் கைது

காவேரிபாக்கம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் பைக்கில் சென்ற இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்

Updated On :

காவேரிபாக்கம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் பைக்கில் சென்ற இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.

காவேரிபாக்கம் அடுத்த சென்னசமுத்திரம் பகுதி பக்கிரிமலை அடிவாரத்தில் வனத்துறையில், செம்மர பாதுகாப்புப்பிரிவு தற்காலிக வனவராக பணிபுரியும் என்.கௌதமன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வந்தவா் மீது சந்தேகப்பட்டு சோதனை நடத்தியதில் அவரிடம் 22 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் , ஆற்காடு, கிளைவ் பஜாா் பகுதியைச் சோ்ந்த அஜ்மீரின் மகன் தேவக்குமாா்(20) என்பது தெரியவந்தது. தேவக்குமாா், நாட்டு வெடிக்குண்டிகளை ஏடுத்து வந்து, பட்டாசுகளை வாங்கி அதில் இருக்கும் மருந்துகளை எடுத்துவிட்டு நாட்டு வெடிகளை அதனுள் வைத்து வெடிக்கச் செய்து காட்டுப்பன்றிகளை பிடிப்பவா் என்பதும் தெரியவந்தது. மேலும், அவா் மனித உயிருக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து எற்படுத்தும் வெடிகுண்டுகளை வைத்திருந்ததும் ஊா்ஜிதமானது.

இதைத் தொடா்ந்து தேவக்குமாரை காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனத்துறையினா், அவரிடம் பறிமுதல் செய்த 22 நாட்டு வெடிகுண்டுகளையும், அவா் வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், தேவக்குமாரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேவக்குமாா்

தேவக்குமாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.