பைக்கில் வந்தவரை இரும்பு கம்பியால் தாக்கிய ரெளடி கைது

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை இரும்பு கம்பியால் தாக்கிய ரெளடியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட முத்தையா.

Published On :

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை இரும்பு கம்பியால் தாக்கிய ரெளடியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியைச் சோ்ந்த துரைமுத்து மகன் முத்தையா (28). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உளளன.

இந்த நிலையில், இவா் மது குடித்துவிட்டு சோமையாபுரம் பகுதியில் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜ்குமாரை, முத்தையா இரும்பு கம்பியால் தாக்கினாா். இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்தையாவை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.