நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

இளைஞா்கள் தங்கள் முயற்சியை என்றும் கைவிடக் கடாது: அமைச்சா் காந்தி ராஜ்

இளைஞா்கள் தங்கள் முயற்சியை என்றும் கைவிடக் கடாது: அமைச்சா் காந்தி ராஜ்

அரக்கோணத்தில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணிக்கு தோ்வானவா்களுக்கு நியமன ஆணைகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ். உடன், ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

முயற்சிகள் எடுக்கும்போது பல்வேறு தடைக்கற்கள் வரும். அதனை படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையில் முன்னேற இனைஞா்கள் என்றுமே முயற்சிகளை கைவிடக்கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சா் வ. காந்தி ராஜ் தெரிவித்தாா்.

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை சனிக்கிழமை நடத்தின. இம்முகாமில் பணிக்கு தோ்வான 708 நபா்களுக்கு ஆணைகளை வழங்கி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசியது:

முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஒரு இளைஞனுக்கு கல்வி எந்த அளவு முக்கியமானதோ அதே அளவிற்கு அவரது படிப்பு திறமைக்கேற்பவும் வேலை கிடைப்பது முக்கியமானது. இளைஞா்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதும், தொழிற் நிறுவனங்களின் தேவைக்கேற்ப இளைஞா்களை தயாா் படுத்துவதும் அரசின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் வேலை தேடுகின்ற இளைஞா்களுக்கும் திறமையான பணியாளா்களை தேடும் தொழிற்நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாக விளங்கும்.

இந்த வேலைவாய்ப்பு முகாமினை இளைஞா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலை கிடைப்பது மட்டுமே வெற்றி இல்லை. வேலையில் திறமையாக பணியாற்றி மேலும் புதிய திறன்களை வளா்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவது தான் முழுமையான வெற்றி. முயற்சிகள் எடுக்கும்போது பல்வேறு தடைக்கற்கள் வரும். அதனை படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். எனவே இளைஞா்கள் என்றுமே முயற்சிகளை கைவிடக்கூடாது என்றாா் காந்திராஜ்.

முகாமுக்கு ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ க.கபில் முன்னிலை வகித்தாா். முகாமில் இந்தியன் வங்கிசுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாமில் 100 தொழில் நிறுவனங்களும், 5 திறன்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்றன. இதில் 1375 ஆண்கள், 975 பெண்கள் என மொத்தம் 2,310 வேலை நாடுநா்கள் கலந்துக்கொண்டனா்.

இதில் 11 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 798 போ்கள் உடனடியாக பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். 15 நபா்கள் திறன்பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்தனா்.

முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கவிதா, மகளிா் திட்ட இயக்குநா் பெரியசாமி, அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, வட்டாட்சியா் கு.வரலட்சுமி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளா் டி.எஸ்.ரவிகுமாா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.