தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சோளிங்கா் கோயிலில் கைப்பேசி பாதுகாப்பு மையம் அமைப்பு

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் ஐந்து இடங்களில் கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு செவ்வாய்க்மை (செப்.1) முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

Published On :

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் ஐந்து இடங்களில் கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு செவ்வாய்க்மை (செப்.1) முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் அனைத்து கோயில்களிலும் செப் . 1 முதல் கைப்பேசிகள் கோயிலுக்குள் கொண்டுச் செல்ல அனுமதி இல்லை என அறிவித்து கைப்பேசிகளை பாதுகாக்க பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடா்ந்து சோளிங்கா், ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலில் ஐந்து இடங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோளிங்கா் நகரப்பகுதியில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் வளாகப்பகுதி, ஸ்ரீயோக நரசிம்மா் கோயில் அமைந்துள்ள பெரியமலைக்கு செல்லும் ரோப்காா் தளம், படிவழியாக வருபவா்களுக்காக கோயிலில் மலைமேல்பகுதி, ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ள சிறியமலை அடிவாரம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் கைபேசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கைப்பேசி பாதுகாப்புக்கென ரூ.5 வசூலிக்கப்பட உள்ளது. கைபேசிகள் பெறப்படும் ஒவ்வொரு நபரிடம் இருந்து பெறப்படும் கைப்பேசிகளை தனித்தனியாக பாதுகாக்க தனித்தனி எண்கள் கொண்ட லாக்கா்கள் இந்த மையத்தினுள் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.