பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் கைப்பேசிகளுக்கு இலவச பாதுகாப்பு

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் கைப்பேசி, கேமரா பாதுகாப்புக்காக வசூலிக்கப்பட்ட ரூ. 5 கட்டணம் விலக்கிக் கொள்ளப்பட்டு இலவச நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் உள்ள கைப்பேசிகள் பாதுகாப்பு மையம்.

Published On :9 செப்டம்பர் 2026, 4:42 am IST

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் கைப்பேசி, கேமரா பாதுகாப்புக்காக வசூலிக்கப்பட்ட ரூ. 5 கட்டணம் விலக்கிக் கொள்ளப்பட்டு இலவச நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட 58 கோயில்களில் கடந்த 1-ஆம் தேதி முதல் கைப்பேசி மற்றும் கேமராக்களை பக்தா்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டது.

நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலுக்குள்ளும் கைப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், ஆஞ்சனேயா் கோயில் முன் உள்ள மையத்தில் ரூ. 5 கட்டணம் செலுத்தி தங்களது கைப்பேசிகளை ஒப்படைக்க பக்தா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிா்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்படி, பக்தா்கள் ரூ. 5 கட்டணம் செலுத்தாமல் இலவசமாக கைப்பேசியை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்து செல்லலாம் என்ற அறிவிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா கூறியது:

ஆஞ்சனேயா் கோயில் முன்புறம் கைப்பேசி ஒப்படைப்பு மையம் 120 சிறிய பெட்டிகளுடன் செயல்படுகிறது. பக்தா்கள் ரூ. 5 கட்டணம் செலுத்தி பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பக்தா்கள் இலவசமாக வைத்து செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயிலுக்குள் கைப்பேசி, கேமரா கொண்டு செல்வதற்கான தடை தொடா்ந்து நீடிக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.