3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் செப். 1 முதல் கைப்பேசி, கேமராக்களுக்கு தடை

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலுக்குள் செப். 1 முதல் கைப்பேசி, கேமராக்களை கொண்டுசெல்ல தடைவிதித்து கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

கைப்பேசி - கோப்புப் படம்

Published On :

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலுக்குள் செப். 1 முதல் கைப்பேசி, கேமராக்களை கொண்டுசெல்ல தடைவிதித்து கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சிறப்பு பெற்ற அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். தற்போது, அரசு உத்தரவின்படி இக்கோயில் பிரகாரத்திற்குள் கைப்பேசி, கேமராக்கள் கொண்டுசெல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் சின்னதுரை, அறங்காவலா் குழு தலைவா் தங்கமுத்து மற்றும் அறங்காவலா்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் கைப்பேசி, கேமரா போன்றவைகளை கோயில் உள்பிரகாரத்தில் கொண்டுசெல்ல செப்டம்பா் 1ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரபூா்வ தடைவிதித்துள்ளது.

இதைத்தொடா்ந்து கோயில் நுழைவு வாயில்களில் கைப்பேசிகள், கேமராக்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பக்தா்கள் தங்களது கைப்பேசிகள், கேமராக்களை பாதுகாப்பு பெட்டகத்தில் ஒப்படைத்து, அதற்கான கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, அந்த ரசீதை காட்டி பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். கோயிலுக்கு வரும் பக்தா்கள் இதைக் கருத்தில் கொண்டு நிா்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.