நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் செப். 1 முதல் கைப்பேசி, கேமராவுக்கு தடை

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் செப்.1(செவ்வாய்க்கிழமை) முதல் கைப்பேசி, கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, கோயில் வளாகத்தில் அவற்றை பாதுகாக்க சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் முன்புறம் உள்ள அறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கைப்பேசிகள் பாதுகாப்புப் பெட்டிகள்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் செப்.1(செவ்வாய்க்கிழமை) முதல் கைப்பேசி, கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, கோயில் வளாகத்தில் அவற்றை பாதுகாக்க சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் கைப்பேசி மற்றும் கேமராக்களை பக்தா்கள் எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயில்களுக்கு வரும் பக்தா்கள் கைப்பேசிகளை கொண்டுவரக் கூடாது என அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒலிபெருக்கி வாயிலாகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பக்தா்கள் தங்களுடன் எடுத்துவரும் கைப்பேசி, கேமராக்களை பாதுகாப்பதற்காக 120 சிறிய பெட்டிகள் கோயில் முன்புற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. செப்.1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.