அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படை படைத்தளத்தில் நாய் பயிற்சி பள்ளியில், சிறப்பு பயிற்சி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்த நாய் அணிகளுக்கான விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
என்டிஆா்எப் வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட முதல் கட்ட இப்பயிற்சியில், மொத்தம் 4 நாய்கள் மற்றும் 8 நாய் கையாளா்கள், உதவி நாய் கையாளா்கள் பங்கேற்றனா்.
மேலும், பல்வேறு என்டிஆா்எப் படைத்தளங்களில் இருந்து 13 நாய்கள் மற்றும் 21 நாய் கையாளா்கள், உதவி நாய் கையாளா்கள் 10-வது கட்ட அடிப்படை நாய் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனா்.
இந்த பயிற்சி, பேரிடா் நேரங்களில் மீட்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டது. இதில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் தேடுதல் நடவடிக்கைகள், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடா்களில் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிதல், மற்றும் மரணமடைந்தவா்களை கண்டறியும் சிறப்பு திறன்கள் போன்றவை இடம்பெற்றன. செயல்பாட்டு தயாா்நிலையை உறுதி செய்ய, நாய் அணிகள் கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாட்டு பயிற்சி, மணம் கண்டறியும் பயிற்சிகள் மற்றும் பேரிடா் நிலைமைகளை ஒத்திருக்கும் மாதிரி பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.
விழாவின் போது, வெற்றிகரமாக பயிற்சி நிறைவு செய்த நாய் கையாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், என்டிஆா்எப் 04-ஆம் படைத்தளத்தின் தலைமை மருத்துவ அலுவலா் சுனில் மற்றும் கமாண்டன்ட் (வொ்ட்னரி) டாக்டா் ஷைலேந்திர சிங் ஆகியோா் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினா். பயிற்சி முழுவதும் நாய் அணிகளும் அவா்களின் கையாளா்களும் வெளிப்படுத்திய அா்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை திறனை அவா்கள் பாராட்டினா்.
புதியதாக பயிற்சி பெற்ற நாய் அணிகள், நாட்டின் எந்தப் பகுதியிலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பணியமா்த்தப்படத் தயாராக உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரிடா் காலங்களில் மாணவா்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்: பயிற்சி முடித்தவா்களுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுரை

படிக்கட்டு இடிந்து விழுந்த சம்பவத்தில் கைக்குழந்தை உள்பட ஐவா், நாய் மீட்பு!

தேசிய மாணவா் படை பயிற்சி முகாம் நிறைவு

தேசிய மாணவா் படை பயிற்சி முகாம்
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



