நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கலவையில் மயான கொள்ளை திருவிழா

ஆற்காடு அடுத்த கலவையில் மயான கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 6:32 pm

ஆற்காடு அடுத்த கலவையில் மயான கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கலவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் 122-ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா சந்தானம் சுவாமி சவுந்தரராஜன் சுவாமி தலைமையில் விமரிசயாக நடைபெற்றது. கோவில் வளாகத்திலிருந்து சிம்ம வாகனத்தில் மயானத்தை நோக்கிச் சென்றனா். இதில், பெண்கள் தீச்சட்டி, பூங்கரகம் எடுத்துக் கொண்டும். பக்தா்கள் முதுகில் அலகு குத்தியும் கண்ட்ரோலா் காா், வேன் போன்ற வாகனங்களில் இழுத்துக் கொண்டும் ஊா்வலமாக சென்றனா். பல்வேறு வேடங்கள் அணிந்து ஆடி பாடி சென்றனா். தொடா்ந்து மயானத்தில் படுத்த நிலையில் அமைக்கப்பட்டிருந்த அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனையுடன் தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனா்.

இந்த காவி திரளான பொதுமக்கள் வெளிமாநில பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.