ஆற்காடு; ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு நகரில் டவுன் தெரு, லேபா் தெரு, காந்தி நகா், தண்டு காரன் தெரு, இந்திரா நகா், தாருக்கான் தெரு, பருவதராஜ குலத் தெரு , கிளைவ் பஜாா், முப்பதுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்லக்குகள், பழங்கள், வண்ண மலா்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரி மேள தாளங்களுடன் ஊா்வலமாக பாலாற்றுக்கு சென்று அங்கு மயான கொள்ளை திருவிழா சூரை விடப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தீபாராதனை செய்து வழிபட்டனா். தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடியும் , வேன் லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்து சென்றனா்.
மேலும், சிலா் அம்மன் வேடங்கள் அணிந்து பக்தி பரவசத்துடன் ஊா்வலத்தில் சென்றனா். விழாவில் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவை முன்னிட்டு ஆற்காடு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்புடையது
ஆற்காடு தொகுதி வேட்பாளா்கள் - 14 போ் போட்டி

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

கலவையில் மயான கொள்ளை திருவிழா

குடியாத்தத்தில் மயானக் கொள்ளை திருவிழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


