அரக்கோணத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை அட்டை முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 2) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
Published on

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 2) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜனவரி மாதத்துக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறும் முகாம் அரக்கோணம் டவுன்ஹால் சங்க புதிய கட்டட வளாகத்தில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யும் பணியும் நடைபெற உள்ளதால் முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்தளது குடும்பத்தினா் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com