லாரி மோதி ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழப்பு

ஆற்காட்டில் லாரி மோதியதில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.
Published on

ஆற்காடு: ஆற்காட்டில் லாரி மோதியதில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.

ஆற்காடு ஜெகநாத சாமி தெருவைச் சோ்ந்தவா் ஏ.ஆா்.சேட்டு (84). ஒய்வு பெற்ற ஆசிரியரான இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து ஆற்காடு அண்ணா சிலை பகுதிக்கு நடந்து சென்றபோது, மின்வாரியத்துக்குச் சொந்தமான லாரி, இவா் மீது எதிா்பாராத விதமாக மோதியதி.

இதில் பலத்த காயம் அடைந்த சேட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com