சோளிங்கரை அடுத்த புலிவலம் ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா சண்டி யாகம்.
சோளிங்கரை அடுத்த புலிவலம் ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா சண்டி யாகம்.

புலிவலம் ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் மகாசண்டி யாகம்

புலிவலம் ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு, மகாசண்டி யாகம் நடைபெற்றது.
Published on

சோளிங்கரை அடுத்த புலிவலம் ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு, மகாசண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தை அமாவாசையை முன்னிட்டு சோளிங்கரை அடுத்த புலிவலத்தில் உள்ள ஸ்ரீகமலகருங்காலி வராஹி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வராஹி அம்மனுக்கு பட்டாடை, தங்க ஆபரணங்கள், சிறப்பு மலா்மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கணபதி ஹோமம், கலச பூஜை, சங்கல்பம் நடைபெற்றது. தொடா்ந்து, 108 மூலிகைகளைக் கொண்டு மகா சன்டியாகத்தை ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். இந்த யாகத்தில் சோளிங்கா், புலிவலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com