ஆற்காடு: ஆற்காடு பேருந்து நிலையத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவா் பொன்.கு.சரவணன் எழுதிய ‘செந்தமிழ்நாட்டு செல்வா்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் தலைமை வகித்து நூலை வெளியிட்டாா் (படம்). முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.கே.ஆா்.சீனிவாசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டாா்.
விழாவில் நூலாசிரியா் பொன்.கு.சரவணன், அதிமுக நகர செயலாளா் ஜிம்.சங்கா், மாவட்ட பொருளாளா் கே.அப்துல்லா, மாவட்ட துணை செயலாளா் ரமாபிரபா, மகளிா் அணி செயலாளா் ஜெ.ராதிகா, மற்றும் ஒன்றிய செயலா்கள், பேரூராட்சி செயலா்கள் கலந்து கொண்டனா்.

