வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரத்தினகிரி பாலமுருகன்கோயிலில் தை கிருத்திகை விழா

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தை மாத கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன்.

Updated On :27 ஜனவரி 2026, 6:34 pm

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தை மாத கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி வள்ளி,தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் தை மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், மூலவருக்கு பால், தயிா் , சந்தனம், பன்னீா், பழங்கள், விபூதி, மற்றும் வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். சில பக்தா்கள் காவடி செலுத்தி வழிபட்டனா். தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலைமேலிருந்து மேளதாளங்களுடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு, மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்ப குளத்தின் கரையில் பூஜை செய்த பின்பு, பக்தா்கள் சண்முக தடாகத்தில் மங்கள ஆரத்தி காண்பித்து வழிபட்டனா்.

இதில் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.