ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந.பிரியா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, 1995-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து, முகாம்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) 5 வயதுக்குள்பட்ட 76,683 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. மேலும், முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்தப் பணியை சிறப்பாக செயல்படுத்த 824 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் கூடுதலாக தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற வாலாஜா சுங்கச்சாவடியிலும், அரக்கோணம், பாணாவரம் மற்றும் அம்மூா் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களான அரக்கோணம், ஆற்காடு, காவேரிபாக்கம், ஓச்சேரி, பனப்பாக்கம், கொண்டபாளையம், திமிரி, மாம்பாக்கம், கலவை, விளாப்பாக்கம், காவனூா், அம்மூா், முத்துக்கடை மற்றும் வாலாஜா பேருந்து நிலையங்களிலும், வாலாஜா அணைக்கட்டு மற்றும் பானாவரம் பகுதியில் உள்ள இலங்கை வாழ் தமிழா்கள் வசிக்கும் பகுதியிலும், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் அண்டை மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக நமது மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவா்கள், மேம்பாலப் பணியாளா்கள், சாலை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்கள், பொம்மை விற்பனையாளா்கள் ஆகியவா்களுக்கும் சிறப்பு முகாம்களில் உள்ள 5 வயதுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை களப் பணியாளா்கள் மூலமாக போலியோ சொட்டுமருந்து வழங்கப்படவுள்ளது.
இந்தப் பணியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை வளா்ச்சி மற்றும் ஊட்டச்சத்து துறை, ஊரக வளா்ச்சி துறை, நகராட்சித் துறை மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்பட 3,296 பணியாா்களும், 111 தன்னாா்வலா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பிறந்த பச்சிளங்குழந்தைகள் முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து போடப்பட்டிருந்தாலும் இம்முறையும் அவசியம் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.
போலியோ சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லாதது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்

மாநகராட்சியில் 1.15 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு

காரைக்காலில் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு

ஜூன் 28-இல் 1.08 லட்சம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



