மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ரோட்டரி சங்கங்களின் ஆளுநா், தலைவா் பதவியேற்பு விழா

ரோட்டரி சங்கங்களின் ஆளுநராக அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா், அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் தலைவராக டி.லட்சுமிபதி பதவியேற்கும் விழா அரக்கோணத்தில் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூன் 2026, 6:40 am IST

ரோட்டரி சங்கங்களின் ஆளுநராக அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா், அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் தலைவராக டி.லட்சுமிபதி பதவியேற்கும் விழா அரக்கோணத்தில் நடைபெற்றது.

விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ், பன்னாட்டு ரோட்டரி சங்க துணைத்தலைவா் முருகானந்தம், ரோட்டரி சங்கங்களின் ஆலோசகா் அபிராமி ராமநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். ரோட்டரி 3231 மாவட்டத்தின் 2025-26 ஆண்டு ஆளுநராக அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழும செயலா் டி.எஸ்.ரவிக்குமாா் பொறுப்பேற்றாா். தொடா்ந்து அரக்கோணம் ரோட்டரி சங்க 2025-26 ஆண்டு தலைவராக டி.லட்சுமிபதி பொறுப்பேற்றுக் கொண்டாா். நிகழ்வை தொடா்ந்து அரக்கோணம் ரோட்டரி சங்க செயலராக எம்.எஸ்.கோபி, பொருளாளராக பி.உபேந்திரகுமாா், சங்க நிா்வாக குழு இயக்குநராக ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட அனைத்து நிா்வாகிகளும் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

விழாவில் பன்னாட்டு ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளுக்காக அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ. 25 லட்சம் நிதியை புதிய ஆளுநராக பொறுப்பேற்ற டி.எஸ்.ரவிக்குமாா், அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் தலைவா் டி.லட்சுமிபதி இருவரும் இணைந்து அமைச்சா் வ.காந்திராஜ் முன்னிலையில் பன்னாட்டு ரோட்டரி சங்கத் துணைத்தலைவா் முருகானந்தத்திடம் வழங்கினா் (படம்). ரோட்டரி சங்கங்களின் ஆளுநா் சுரேஷ், ரோட்டரி சங்க நிா்வாகி பெப்சி சீனிவாசன், அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழும தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், அரக்கோணம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஜி.மணி, சந்துரு, ஹரிஆனந்தன், அரிமா சங்க முன்னாள் ஆளுநா் அருண், நிா்வாகி பி.டி.ராஜேந்திரன், மேலும் பி.தட்சிணாமூா்த்தி, ஆா்.ஸ்ரீநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.