ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

அரக்கோணம் ரயில்நிலைய நடைமேடைகளின் எண்கள் மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது!

அரக்கோணம் ரயில்நிலைய நடைமேடைகளின் எண்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் மாற்றி அறிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜூன் 2026, 12:49 am IST

அரக்கோணம் ரயில்நிலைய நடைமேடைகளின் எண்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் மாற்றி அறிவித்துள்ளது. இந்த புதிய எண்னுக்கான நடைமுறைகள் ஞாயிற்றுக்கிழமையே அமலுக்கு வந்தது.

அரக்கோணம் ரயில்நிலையத்தில் ஏற்கனவே ரயில் நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் தெற்கில் இருந்து வடக்காக 1, 2, 3, 4, 5 ஆகிய நடைமேடைகள் இருந்தன. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 1ஏ, 6, 7 ஆகிய நடைமேடைகள் அமைக்கப்பட்டன. இவை தெற்குபகுதியில் 1-ஆம் நடைமேடைக்கு தெற்கு பகுதியிலேயே இருந்ததால் இந்த மூன்று நடைமேடைகளின் எண்கள் தனியாக இருந்தன.

தற்போது அரக்கோணம் ரயில்நிலையம் அம்ரீத்பாரத் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமேடைகளின் எண்கள் மாற்றப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தன. ஞாயிற்றுக்கிழமை ரயில்நிலைய ரயில்கள் வருகை, புறப்பாடு அறிவிப்பில் புதிய எண்கள் படியே அறிவிக்கப்பட்டன.

ஏற்கனவே 7, 6, 1ஏ, 1, 2, 3, 4, 5 என்ற வரிசைப்படி இருந்த நடைமேடை எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 என மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய எண்ணின் படி ஞாயிற்றுக்கிழமை ரயில்களின் வருகை, புறப்பாடு ஆகியவை அரக்கோணம் ரயில்நிலைய ஒலிபெருக்கி அறிவிப்பில் அறிவிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.