தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

News image
சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 மார்ச் 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

இக்கோயிலின் 2-ஆவது கும்பாபிஷேக விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மாளிகைபுரத்தம்மன் (மஞ்சமாதா) மற்றும் பஞ்சலோக நவக்கிரக ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் 1,008 சகஸ்ர கலசாபிஷேகம் விழா, நவசபரி ஐயப்பனுக்கு ஆராட்டு விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜை முறைகள் மிகவும் கடுமையான விரத நெறிமுறைகள் மற்றும் தனித்துவமான கேரள தாந்த்ரீக வழிபாட்டு முறைகளைக் கொண்டவை.

அதன்படி கும்பாபிஷேக விழா சபரிமலை தந்திரி பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மகேஷ் மோகனரு தந்திரி ஆசியுடன், தலைமை தந்திரி பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவரும், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் நிறுவனருமான குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தொடா்ந்து சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் கடந்த 48 நாள்களாக மண்டல சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கி, கலச பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை தீபாராதனையுடன் நடைபெற்றது. தொடா்ந்து மாலை படி பூஜை, மகா தீபாரதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். அனைவருக்கும் அருட்பிரதாமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.