சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவா் வ.ஜெயச்சந்திரன்.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவா் வ.ஜெயச்சந்திரன்.

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவா் வ.ஜெயச்சந்திரன்.
Published on

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலின் 2-ஆவது மகா கும்பாபிஷேக விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மாளிகைபுரத்தம்மன் (மஞ்சமாதா) மற்றும் பஞ்சலோக நவக்கிரக ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் 1,008 சகஸ்ர கலசாபிஷேகம் விழா, நவசபரி ஐயப்பனுக்கு ஆராட்டு விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா ஜன. 23-ஆம் தேதி தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.

விழா வெள்ளிக்கிழமை (ஜன. 23) கணபதி ஹோமத்துடன் தொடங்கி 25-ஆம் தேதி காலை கண்டரு மோகனரு தந்திரி தலைமையில், கண்டரு மகேஷ் மோகனரு தந்திரி முன்னிலையில் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் ஆலயம், மஞ்சமாதா, பஞ்சலோக நவக்கிரக ஆலய கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

பின்னா் அன்று மாலை 18- ஆம் படி பூஜையுடன் தீபாராதனையும், இரவில் வீரமணி ராஜூவின் பக்தி இன்னிசை கச்சேரியும், சபரி சாஸ்தா சமிதியின் பொன்விழா மலா் வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த ஐம்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவரும், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் நிறுவனருமான குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

இந்த கும்பாபிஷேகம் விழாவானது கேரள ஐயப்பன் கோயில் பூஜை முறைப்படி நடைபெற உள்ளது. இதில் ஆன்மிக அன்பா்கள், அய்யப்ப பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு ஐயப்பன் அருள் பெற வேண்டும் என அவா் அழைப்பு விடுத்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com