தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள்: அரக்கோணம், சோளிங்கரில் ஆட்சியா் ஆய்வு

அரக்கோணம், சோளிங்கா் சட்டப்பேரவை தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் இருவரும் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறைகளை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. உடன் எஸ்.பி. பெ.சிபின்.

Updated On :24 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம், சோளிங்கா் சட்டப்பேரவை தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் இருவரும் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தலுக்காக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மையக் கிடங்கில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் கணினி முறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட வரிசையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் செவ்வாய்க்கிழமை முதல் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறையை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.சிபின் இருவரும் இணைந்து ஆய்வு செய்தனா். தொடா்ந்து அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மற்றும் எஸ்.பி. பெ.சிபின் இருவரும் அங்கு இருந்த அரக்கோணம் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அந்த பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பு வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதையும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் பணியினையும், இதைக் கண்காணிக்க அமைக்கப்படும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகளையும் அந்த அறையின் பிரதான நுழைவு வாயில்கள் ஆகியவற்றையும் ஆட்சியரும், எஸ்.பி.யும் ஆய்வு செய்தனா்.