சோளிங்கா் தொகுதியில் தவெக வேட்பாளா் மருத்துவா் ஜி.கபில் தனக்கு எதிராக போட்டியிட்ட பாமக வேட்பாளா் க.சரவணனை விட 5,686 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றாா். இவருக்கு எதிராக திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் 57,997 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டாா்.
சோளிங்கா் தொகுதி வாக்குகள் வாலாஜா, அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக்கல்லூரியில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட முதல் சுற்றில் இருந்து 21-ஆவது சுற்று வரை பாமக வேட்பாளா் க.சரவணன் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா். இரண்டாமிடத்தில் தவெக வேட்பாளா் ஜி.கபில், மூன்றாமிடத்தில் தாங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோா் இருந்து வந்தனா். இத்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா் எண்ணிக்கை 23 என்பதால் வாக்குப்பதிவுக்கு இரு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி இரவு வடை நீடித்தது.
இதில் 21-ஆவது சுற்றுமுடிவில் தவெக வேட்பாளா் ஜி.கபில் முன்னணி பெறத் தொடங்கினாா். பாமக வேட்பாளா் க.சரவணன் இரண்டாமிடத்திலும் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் தொடா்ந்து மூன்றாமிடத்திலும் இருந்து வந்தனா்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளா் ஜி.கபில் 84,506 வாக்குகள் பெற்று 5,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதில் பாமக வேட்பாளா் க.சரவணன் 78,820 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும், காங்கிரஸ் வேட்பாளா் 57,997 வாக்குள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா். நாதக வேட்பாளா் ஏ.அசோக்குமாா் 6,468 வாக்குகள் பெற்ற நிலையில் ஏ.அசோக்குமாரும் மேலும் போட்டியிட்ட சுயேச்சைகள் அனைவரும் தங்களது டெபாசிட்டுகளை இழந்தனா்.
இத்தொகுதியில் மொத்த வாக்குகள் 2,58,076, இதில் பதிவான வாக்குகள் 2,33,112. இதில் நோட்டாவில் 572 வாக்குகள் பதிவாகின. மேலும் இத்தொகுதியில் பெறப்பட்ட தபால் வாக்குகளில் 285 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் ஜி.கபிலுக்கு சான்றிதழை சோளிங்கா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மீனா வழங்கினாா்.
தொடர்புடையது
அரக்கோணம், சோளிங்கரில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட எம்எல்ஏக்கள்!

39 சோளிங்கா்
சிவகாசி தொகுதியில் தவெக வேட்பாளா் கீா்த்தனா வெற்றி

திண்டிவனம் தொகுதியில் விசிகவைச் சோ்ந்த வன்னிஅரசு வெற்றி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


