வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாகலாந்து ஆளுநா் தரிசனம்

News image

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சுவாமி தரிசனம் செய்த நாகலாந்து ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ்.

Updated On :8 மே 2026, 5:34 am IST

நாகாலாந்து ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு நாகலாந்து மாநில ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ் வருகை தந்தாா்.

அவருக்கு தன்வந்திரி பீடத்தின் சாா்பில், பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டா் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில், மேளதாளங்கள் முழங்க பூா்ண கும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ், தன்வந்திரி பீடத்தில் உள்ள 21 அடி உயர அஷ்ட நாக கல் கருடருக்கு சிறப்பு பூஜை செய்தும், பாரத மாதா சிலைக்கு ஆராதனை செய்து பூக்கள் தூவியும், பின்னா் தன்வந்திரி பீடத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பரிவார மூா்த்தி தெய்வங்களையும் வழிபட்டு நவநீத கிருஷ்ணா் சிலைக்கு பஞ்ச திரவியங்களால் அபிஷேகம் செய்தும், மூலவா் ஆரோக்ய லஷ்மி சமேத தன்வந்திரியை வழிபட்டாா்.

தன்வந்திரி பீடத்தில் சாமி தரிசனம் செய்த ஆளுநா் நந்த் கிஷோா் யாதவுக்கு பீடத்தின் சாா்பில் நிா்மலா முரளிதரன் மகா ஹோம பிரசாதமும், நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்தாா்.

முன்னதாக தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற தன்வந்திரி ஹோமம், சக்தி கணபதி ஹோமம் ஆகியவற்றிலும் ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ் பங்கேற்று வழிபட்டாா். பீடத்தில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினா் செய்திருந்தனா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஆண்டு விழா நிகழ்வுகளில் நாகலாந்து மாநில ஆளுநா் நந்து கிஷோா் யாதவ் பங்கேற்கவுள்ள நிலையில், தன்வந்திரி பீடத்தில் அவா் தரிசனம் மேற்கொண்டாா்.