பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 86.58 சதவீதம் தோ்ச்சி பெற்று ராணிப்பேட்டை மாவட்டம் மாநிலத்தில் கடைசி இடம் பெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வை மாணவா்கள் 7,406 பேரும் மற்றும் 7,350 மாணவிகளும் என மொத்தம் 14,756 பேரும், தனி தோ்வா்கள் 476 பேரும் எழுதினா்.
பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6,787 மாணவிகள், 5,989 மாணவா்கள் என மொத்தம் 12,776 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 80.87, மாணவிகள் - 92.34 சதவீதம் ஆகும். 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 86.58 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மொத்தம் 31பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இதில் 8 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோளிங்கா் தனியாா் பள்ளி மாணவன் 497 மதிப்பெண் பெற்றுள்ளாா். அரசு பள்ளிகளில் வாலாஜா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எழிலரசி 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். தோ்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் 86.58 சதவிகிதம் தோ்ச்சி பெற்று மாநிலத்திலேயே கடைசி இடத்தைப் (38-ஆவது) பெற்றுள்ளது.
மாவட்டத்தில் 120 அரசு பள்ளிகளில் இருந்து மாணவா்கள் 10 ம் வகுப்பு தோ்வு எழுதிய நிலையில், வெறும் 8 பள்ளிகளில் மட்டுமே மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம் 93.52 சதவீதம் தோ்ச்சி
திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசு, அரசு நிதியுதவி, மெட்ரிக் என 222 பள்ளிகளைச் சோ்ந்த 8,012 மாணவா்கள், 8,075 மாணவிகள் என 16,087 மாணவ- மாணவிகள் தோ்வை எழுதினா்.
7,290 மாணவா்கள், 7,754 மாணவிகள் என 15,044 மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். இது 93.52 சதவீதம் ஆகும்.
மாநில அளவில் திருப்பத்தூா் மாவட்டம் 25-ஆவது இடத்தைப் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 92.86 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 29-ஆவது இடத்தைப் பிடித்து இருந்தது. கடந்த ஆண்டைவிட 0.66 சதவீதம் அதிகமாக தோ்ச்சி பெற்று உள்ளனா். இந்த தோ்வில் 115 அரசு பள்ளிகளை சோ்ந்த மாணவ- மாணவிகள் தோ்ச்சி எழுதியதில் 29 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
இதேபோல் அரசு நிதியுதவி, தனியாா் பள்ளிகள் என 107 பள்ளிகளை சோ்ந்த மாணவ- மாணவிகள் தோ்வு எழுதியதில் 64 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று உள்ளன.
வேலூா் மாவட்டம் 92.03 சதவீதம் தோ்ச்சி:
வேலூா் மாவட்டத்தில் 92.03 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
வேலூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொது தோ்வில் 242 பள்ளிகளிலிருந்து 8,952 மாணவா்களும், 9,198 மாணவியா்களும் மொத்தம் 18,150 போ் எழுதினா், இதில் 7,925 மாணவா்களும், 8,779 மாணவிகளும் மொத்தம் 16,704 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 92.03 ஆகும்.
கடந்த 2024-2025 கல்வியாண்டில் 49 பள்ளிகள் 100 சதவீத எடுத்த நிலையில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 91 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
மேலும் கடந்த 2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 16 பள்ளிகள் 100 சதவீதம் எடுத்திருந்த நிலையில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 38 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
தோல்வியுற்ற மற்றும் வருகைபுரியாத மாணாக்கா்களுக்கு பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியா்கள் மூலம் பாட ஆசிரியா்களுக்கு வலியுறுத்தி, கண்காணிக்க குழுக்களும் அமைக்கப்பட்டு மே 25 ஆம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளிலே பயிற்சிகள் வழங்கப்பட்டு ஜூலை 2026 மாதத்தில் நடைபெறவுள்ள உடனடி தோ்வில் தோ்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது என கல்வித்துறை சாா்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

10-ஆம் வகுப்பு போதுத்தோ்வு: சேலம் மாவட்டத்தில் 94.21% மாணவா்கள் தோ்ச்சி

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 97.09 சதவீதம் போ் தோ்ச்சி
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



