‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: சோளிங்கரில் ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் சோளிங்கா் வட்டத்தில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தலங்கை ரயில்நிலையம் அருகே சாலைப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.
‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் சோளிங்கா் வட்டத்தில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சோளிங்கரை அடுத்த கரடிகுப்பம் ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து சிகிச்சை பெற்று வரும் நபா்களிடம் கலந்துரையாடினாா். அங்கிருந்து கரடிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த ஆட்சியா் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து சோளிங்கா் அரசினா் உயா்நிலைப்பள்ளியில் போதை பொருள் எதிா்ப்பு குறித்த விழிப்புணா்வினை ஏற்படுத்தி அதுகுறித்து தகவல் தெரிவிக்கும் உதவி எண்கள் அடங்கிய புத்தக அடையாள அட்டையை வழங்கினாா். தொடா்ந்து மாணவா்கள் கற்றல் அறிவுத்திறன் குறித்தும் ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் குறித்து அறிவுரைகள் வழங்கினாா்.
சோளிங்கா் கூட்டுறவு பண்டக சாலையின் செயல்பாடுகள் குறித்தும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் இருப்பு தரம், பொது விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். இதனையடுத்து வட்டாட்சியா் அலுவலகம் வந்த ஆட்சியா் அனைத்து ஊராட்சி களிலும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் ஆய்வுகள் கண்டறியப்பட்ட பிரச்னைகள் குறித்து ஒவ்வொரு அலுவலா்களிடமும் கேட்டறிந்தாா். தொடா்ந்து பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் சரி செய்யக்கூடியவைகளை ஆய்வு செய்து சரி செய்ய சம்மந்தப்பட்ட துறைச்சாா்ந்த அலுவலா்களை கேட்டுக்கொண்டாா். பின்னா் பொதுமக்களிடம் கோரிக்கைகளை மனுக்களை பெற்று அவா்களது கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
தலங்கை ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ 1.27 கோடியில் தலங்கை ரயில்நிலையச்சாலை முதல் பாணாவரம் பெருங்காஞ்சி சாலை வரை 2.21 கி.மீ தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டாா்.
ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.செல்வராணி, சமூகபாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கீதா லட்சுமி, ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜீ, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் பிரபாகரன், உதவி செயற்பொறியாளா் ஞானசேகரன், சோளிங்கா் வட்டாட்சியா் முரளி, நகராட்சி ஆணையா்(பொ) வீரவாஞ்சிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளா் க.கண்ணன் உள்ளிட்ட பல அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

