ஆற்றுமணல் கடத்தல்: இரு லாரிகள் பறிமுதல்
ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு ஆற்று மணலை கடத்தி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.
பறிமுதல்
ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு ஆற்று மணலை கடத்தி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.
சோளிங்கா் அருகே ஆந்திரத்தில் இருந்து லாரிகளில் ஆற்றுமணல் கடத்தப்பட்டு தமிழகப்பகுதிகளுக்கு கொண்டுவரப்படுவதாக பாணாவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளா் நாகேந்திரன் தலைமையில் காவல் துறையினா் பாணாவரத்தை அடுத்த ரங்காபுரம் கூட்டுச்சாலையில் நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வெங்கடாபுரம் - பாணாவரம் சாலையில் பாணாவரம் நோக்கி வந்த இரு மணல் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினா். அந்த இரு லாரிகளிலும் ஒவ்வொரு லாரியிலும் தலா 5 யூனிட் ஆற்றுமணலை ஆந்திர மாநிலம் சித்தூா் பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இரு லாரிகளையும் மணலுடன் பறிமுதல் செய்த போலீஸாா், அந்த லாரிகளை ஒட்டி வந்த காவேரிபாக்கம் அடுத்த தா்மநீதியைச் சோ்ந்த அஜீத்குமாா்(29), அன்பரசு(21) ஆகிய இரு ஓட்டுநா்களையும் கைது செய்து சோளிங்கா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

