ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்துனா்.

பிரதிப் படம்

Published On :

ஆந்திரத்தில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்துனா்.

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான தொட்டிகிணறு பகுதியில் உதவி காவல்ஆய்வாளா்கள் ரஞ்சித், வெங்கடேசன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த 2 லாரிகளை போலீஸாா் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினா்.

ஓட்டுநா்கள் லாரியை சிறிது தூரம் ஓட்டிச் சென்று சாலை ஓரமாக நிறுத்தி விட்டு தப்பினா். பிறகு லாரிகளில் சோதனை செய்ததில் செயற்கை மணல் கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டது. பிறகு 2 லாரிகளையும் பறிமுதல் செய்து திம்மாம்பேட்டை காவல்நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கொத்தூா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா், மல்லப்பள்ளியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் ஆகியோா் ஆந்திராவில் இருந்து சட்ட விரோதமாக அனுமதி இல்லாமல் லாரியில் செயற்கை மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.