நெல் விதை சுத்திகரிப்பு மையம்: விவசாயிகள் கோரிக்கை
அரக்கோணம் வட்டாரத்தில் தனியே நெல் விதை சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

கூட்டத்தில் பங்கேறற வேளாண் அதிகாரிகள், விவசாயிகள்.
அரக்கோணம் வட்டாரத்தில் தனியே நெல் விதை சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.
அரக்கோணம் வட்டார அரசு வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், விற்பனைத்துறை அதிகாரிகளுடன் வட்டார விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் ரா.காா்த்திக் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் ஆய்வுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன் காந்தி வரவேற்றாா்.
கூட்டத்தில் வட்டார துணை வேளாண் அலுவலா் ந.மாதையன், உதவி வேளாண் அலுவலா் இ.முகமதுரியாஸ், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் கி.காவ்யா, மு.சந்தியா, ஆத்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளா் கோ.மோகனசுந்தரம், உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரகதீஸ்வரன் மேலும் விவசாயிகள் காவனூா் சுப்பிரமணி, வேடல் அசோகரன், நந்திவேடுதாங்கல் கோவா்த்தனன், பாராஞ்சி மணி, செய்யூா் வெங்கடேசன், மூதூா் கொள்ளாபுரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெறும் நடைமுறையை எளிதாக்கி சிறுகுறு விவசாயிகளும் பயன்பெற செய்ய வேண்டும், தோட்டக்கலைத்துறை மூலம் நடப்பாண்டில் தரமான ராமேசுவரம் மல்லி ரகத்தை மட்டும் பரப்பு விரிவாக்க இனத்தில் வழங்க வேண்டும், அரக்கோணம் வட்டாரத்தில் ஒவ்வொரு பருவத்திலும் குறைந்தது 15 மெ. டன் விதைகளை விநியோகம் செய்ய வேண்டும், அரக்கோணம் வட்டாரத்திற்கென தனியே நெல்விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

