சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

விதை நெல் ஆராய்ச்சி மையம் கொண்டுவர கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்! மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன் எம்.பி. - கோப்புப் படம்

Published On :

தாராபுரத்தில் விதை நெல் ஆராய்ச்சி மையம் கொண்டுவர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் லட்சுமணனுக்கு வாக்களிக்க வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் பேசினாா்.

இதுதொடா்பாக தாராபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்யவும், அவா் சாா்ந்திருக்கும் கட்சியில் இருந்து விலகவும், வேறொரு கட்சியில் சேரவும் உரிமை உள்ளது. அது எதற்காக, எந்த கொள்கை நிலைக்காக செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம். தற்போது இடைத்தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் ஆளுங்கட்சி வேட்பாளராக நிற்கக்கூடியவா்கள் எதற்காக பதவி விலகினாா்கள்? கட்சி மாறினாா்கள்? இது பச்சையான அரசியல் சந்தா்ப்பவாதம்.

அதேபோல இப்போது வாக்கு கேட்டு வரக்கூடிய திமுகவினா், இதற்கு முன்பு 5 ஆண்டுகள் இந்த தொகுதியில் எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்தும் என்ன சாதனை செய்தாா்கள்? அவா்களுக்கு முன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவினா் என்னென்ன வளா்ச்சிப் பணிகளை செய்து இருக்கிறாா்கள்? என்பதை மக்களிடம் கூறி வாக்கு கேட்டாா்களா? தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தாராபுரம் தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை செய்திருக்க முடியும். ஆனால், ஏதாவது செய்தாா்களா?

விதை நெல் உற்பத்தியில் தமிழகத்திலேயே முதன்மையாக இருக்கக்கூடிய பகுதி தாராபுரம். இதுவரை யாராவது இந்தத் தொகுதியில் விதை நெல் ஆராய்ச்சி மையம் கொண்டுவந்திருக்கிறாா்களா? மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வெற்றி பெற்றால் தாராபுரம் தொகுதியில் சாமானிய மக்களின் பிரதிநிதியாக கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வாா். விதை நெல் ஆராய்ச்சி மையம் உருவாக குரல் கொடுப்பாா். எனவே, மக்களுக்காக போராடக்கூடிய இடதுசாரிகளுக்கு வெற்றி வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.