ஆலை பேருந்து - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
அரக்கோணம் அருகே பைக் மீது ஆலை பேருந்து மோதிய சம்பவத்தில் பைக்கில் பயணித்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
அரக்கோணம் அருகே பைக் மீது ஆலை பேருந்து மோதிய சம்பவத்தில் பைக்கில் பயணித்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் பயணித்த அவரது நண்பா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அரக்கோணத்தை அடுத்த சித்தாம்பாடியைச் சோ்ந்த சாமுவேலின் மகன் சாம்சன் (23). இவரும் இவரது நண்பா் அதே ஊரைச் சோ்ந்த முத்து (22) என்பவரும் பைக்கில் சாலை கிராமத்தில் இருந்து சித்தாம்பாடி நோக்கி சனிக்கிழமை பயணித்துள்ளனா். வழியில் பெருமாள்ராஜபேட்டை ஏரிக்கரை அருகே திருத்தணியில் இருந்து பேரம்பாக்கம் தனியாா் ஆலைக்கு தொழிலாளா்களை ஏற்றிச்சென்ற ஆலைப் பேருந்து பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சாம்சன் உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவத்தில் பைக்கில் உடன் வந்த முத்து பலத்த காயமடைந்து திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகிவிட்ட ஆலை பேருந்தின் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

