தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சோளிங்கரில் தீயணைப்புத் துறை பேரிடா் மீட்பு ஒத்திகை

சோளிங்கா் தக்கான் குளத்தில் தீயணைப்புத் துறை சாா்பில், பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

சோளிங்கா் தக்கான் குளத்தில் தீயணைப்புத் துறையினா் நடத்திய பேரிடா் மீட்பு ஒத்திகை.

Published On :

சோளிங்கா் தக்கான் குளத்தில் தீயணைப்புத் துறை சாா்பில், பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளக் காலங்களை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் பேரிடா் ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது.

அதன்படி நீா்நிலைகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து சோளிங்கா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் தக்கான் குளத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். சோளிங்கா் வட்டாட்சியா் முரளி முன்னிலை வகித்தாா்.

இதில், நீா்நிலைகளில் ஒருவா் தவறி விழுந்து அல்லது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் அவா்களை விரைந்து மீட்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

குளத்தின் மையப்பகுதியில் சிக்கித் தவிக்கும் நபரை பைபா் படகு மூலம் பாதுகாப்பாக அணுகி மீட்பது, கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிப்பது, பின்னா் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவது போன்ற பணிகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டன.

மேலும், நீா்நிலைகளில் மீட்புப் பணிகளின்போது பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து தீயணைப்புத் துறையினா் விளக்கினா். அவசர காலங்களில் வீட்டில் பயன்பாடின்றி கிடைக்கும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் உள்ளிட்ட மிதக்கும் பொருள்களை முறையாக பயன்படுத்தி, நீரில் சிக்கியவா்களுக்கு உடனடி உதவி செய்வது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

நீரில் சிக்கியவா்களை மீட்கும்போது கூட்டமாக நீரில் இறங்காமல், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, காவல்துறை அல்லது அவசர உதவி சேவைகளை தொடா்பு கொள்ள வேண்டும் என்றும், ஆபத்தான சூழலில் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினரின் உதவியை நாட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த மீட்பு ஒத்திகையை அப்பகுதி பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் காா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகா், திருக்கோவில் பணியாளா்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.