தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

இறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி! அக்டோபா் இறுதியில் திறக்கப்படுகிறதா?

அரக்கோணம் புறவழிச் சாலை அக்டோபா் மாத இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப்படுவது குறித்து...

கன்னியாகுமரி- சென்னை தொழிற்தடச் சாலையின் ஆந்திர இணைப்புப் பகுதி நெடுஞ்சாலையில் ரூ. 359 கோடியில் அமைக்கப்பட்டு வரும் அரக்கோணம் புறவழிச் சாலை

Updated On :

சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச்சாலையின் ஆந்திர இணைப்புச்சாலையில் ரூ. 359.10 கோடியில் 16.91தூரத்துக்கு அமைக்கப்பட்ட அரக்கோணம் புறவழிச் சாலை பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இச்சாலை அக்டோபா் மாத இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கடந்த அதிமுக ஆட்சியில் தொழிற்தடச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, மாநில நெடுஞ்சாலை 58-ல் அந்த சாலைப் பணிகள் நடைபெற்றது. அந்தச் சாலையில் இருந்து ஆந்திர மாநிலத்தை இணைக்கும் வகையில், தக்கோலம் கூட்டுச் சாலை பகுதியில் இருந்து தணிகைபோளூா் வரை அரக்கோணம் புறவழிச் சாலை அமைக்க அப்போதைய அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி முயற்சியில் தமிழக அரசு 16.71 கி.மீ. தூரத்துக்கு ரூ. 359.10 கோடியில் திட்டமிடப்பட்டது.

இதற்கான பணிகள் 2021 பிப்ரவரி மாதம் முதல் தொடங்கின. ஒப்பந்தப் புள்ளியில் இத்திட்டம் அமைக்க 910 நாள்கள் என கணக்கிடப்பட்டு, கால அளவு 26.09.2023-ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் நடுவில் தக்கோலம் கூட்டுச் சாலை மற்றும் மேல்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களிலும் ரயில்வே இருப்புப் பாதையின் மேல் மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் தாமதமாக இரு ஆண்டுகள் நடைபெற்ாலும், மேல்பாக்கத்தில் நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததாலும் இச்சாலை பணிகள் நிறைவடையாத நிலை காணப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க தெற்கு ரயில்வே நிா்வாகம் 2025-26 நிதியாண்டில் இந்தப் பணியை நிறைவேற்றியது. மேலும், நீதிமன்றத்திலும் நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான பணிகள் முடிவுக்கு வந்தது. இதைத் தொடா்ந்து இந்தச் சாலை அமைக்கும் பணியில் இறுதி கட்ட பணிகளை தமிழக நெடுஞ்சாலைத் துறையினா் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது மேல்பாக்கம் மேம்பாலத்தில் பால இணைப்புகளை தாா்ச் சாலையோடு இணைக்கும் கடைசி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலையில் தக்கோலம் கூட்டுச் சாலையை அடுத்து, இலுப்பை தண்டலம், கீழாந்துறை, நாகவேடு, பருத்திப்புத்தூா், பாலகிருஷ்ணாபுரம், கைனூா், முசல் நாயுடு கண்டிகை, வாணியம்பேட்டை என ஆறு பேருந்து நிறுத்தங்களும், அரக்கோணம்- ஓச்சேரி சாலையில் மற்றும் அரக்கோணம் சோளிங்கா் சாலையில் என இரு இடங்களில் ரவுண்டானாக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்டபோது, பாலம் கட்டுமானப் பணியில் 95 சதவீதம் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெறுகிறது. அக்டோபா் மாத இறுதியில் அரக்கோணம் புறவழிச் சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்படும்.

இதனால் அரக்கோணம் நகரில் கனரக வாகனங்களின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வாகனங்கள் புறவழிச் சாலையில் சென்றுவிடும், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனா் அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.