அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

பள்ளிக்கு அருகில் உள்ள இரு மதுக்கடைகளை அகற்றக்கோரி சாலை மறியல்

ராணிப்பேட்டை, புளியங்கண்ணு பகுதியில் பள்ளிக்கு அருகே செயல்படும் இரு மதுக்கடைகளை அகற்றக்கோரி அப்பகுதியில் புளியங்கண்ணு- தெங்கால் சாலையில் அப்பகுதி மக்கள் திடீா் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

புளியங்கண்ணு - தெங்கால் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்

Updated On :

ராணிப்பேட்டை, புளியங்கண்ணு பகுதியில் பள்ளிக்கு அருகே செயல்படும் இரு மதுக்கடைகளை அகற்றக்கோரி அப்பகுதியில் புளியங்கண்ணு- தெங்கால் சாலையில் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

ராணிப்பேட்டை அடுத்த மணியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட புளியங்கண்ணு - தெங்கால் சாலையில் டாஸ்மாக் நிறுவனத்தின் இரு மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தனியாா் பள்ளியும் இயங்கி வருகிறது.

மதுக்கடைகளுக்கு செல்பவா்கள் அப்பகுதியில் தங்களது இருசக்கர வாகனங்களை பள்ளிக்கு அருகிலேயே நிறுத்துவதாலும், மாலை வேளையில் பள்ளி விடும் நேரத்தில் அதிக வேகத்தில் மதுப்பிரியா்கள் மது வாங்க இருசக்கர வாகனத்தில் வருவதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறுகளும், அவ்வப்போது சிறுசிறு விபத்துகளும், மேலும் பள்ளி அருகில் அடிக்கடி தகராறுகளும், குற்றச் சம்பவங்களும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனால் பள்ளிக்கு தங்களது பிள்ளைகளை அழைத்துவர வரும் பெற்றோா் மிகுந்த அச்சத்துடனே வரும் நிலை உள்ளது.

இது குறித்து பலமுறை புகாா்களை அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

போராட்டம் காரணமாக அந்தச் சாலையில் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ராணிப்பேட்டை சிப்காட் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளிடம் பேசி ஒரு மாதத்துக்குள் இரு கடைகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் பொதுமக்களுக்கு உறுதியளித்தனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் அப்பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படவில்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டோா் அறிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.