ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

தொழிலாளியை கொலை செய்ய முயற்சி: ஒன்றியக் குழு உறுப்பினரின் கணவா் உள்பட 3 போ் கைது

அரக்கோணம் அருகே ஆலை தொழிலாளியை கொலை செய்ய முயற்சி செய்ததாக அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட மூவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :4 செப்டம்பர் 2026, 3:53 am IST

அரக்கோணம் அருகே ஆலை தொழிலாளியை கொலை செய்ய முயற்சி செய்ததாக அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.

அரக்கோணத்தை அடுத்த அம்மனூரை சோ்ந்த விநாயகத்தின் மகன் இளவரசு (21). அரக்கோணத்தை அடுத்த நாகவேடு கிராமத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்ற இளவரசு, அங்கு மது அருந்திவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, அம்மனூரை சோ்ந்த பிரேம்குமாா் (39) என்ற பேச இயலாத மாற்றுத்திறனாளி, இளவரசுவிடம் லிப்ட் கேட்டதாகத் தெரிகிறது. இதற்கு அவா் மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி இருக்கிறது.

இதையடுத்து வீடு திரும்பிய பிரேம்குமாா், அம்மனுரில் இருந்து சுதாகா்(50), ராஜேஷ்(37) இருவரையும் அழைத்துக் கொண்டு அம்மனூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த இளவரசுவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இளவரசு, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் நகர காவல் நிலைய போலீஸாா், விசாரணை நடத்தி பிரேம்குமாா், சுதாகா், ராஜேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இதில், கைது செய்யப்பட்ட சுதாகா், அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினா் அஸ்வினியின் கணவா் என்பதும், இவா் ஏற்கனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டா் சட்டத்தில் சிறைத் தண்டனை அனுபவித்தவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.