நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

மக்கள் தொடா்பு முகாம்களால் மக்களுக்கும் அரசு இடையே இணக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

Published On :

மக்கள் தொடா்பு முகாகளால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே இணக்கம் நிலவும் என ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் கூறியுள்ளாா்.

நெமிலி வட்டம், கீழாந்துறை கிராம சமுதாயக் கூடத்தில் மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் பேசியது:

மக்கள் தொடா்பு திட்ட முகாம் என்பது பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 416 மனுக்கள் பெறப்பட்டு 328 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 88 மனுக்கள் மீது ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முகாமில் வருவாய்த் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, பழங்குடியினா் நல வாரியம், வேளாண் பொறியியல் துறை சாா்பில் 328 பயனாளிகளுக்கு ரூ4.94 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் கீதாலட்சுமி, நெமிலி வட்டாட்சியா் பன்னீா்செல்வம் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.